மொழிபெயர்ப்பு திறன்விருத்தி பாடநெறி(10 நாள் வதிவிட)
இந்த பாடநெறியின் நோக்கம் சிங்களம், தமிழ், தமிழ் மற்றும் ஆங்கில மொழியினை உபயோகித்து சுமார் 30 பேரினை ஒரே தடவையில் பயிற்றுவிப்பதாகும். இங்கு குறிப்பிட்டுள்ள மூன்று மொழிகளில் யாதேனும் இரண்டு மொழிகள் பற்றிய அபேட்சகரின் அறிவு வளத்தினைப் பயன்படுத்தி அவருக்கு மொழிபெயர்ப்பு பற்றிய அடிப்படை எண்ணக்கருக்களை அறிமுகப்படுத்தி மொழிபெயர்ப்புப் பணியுடன் தொடர்புடைய தொழிநுட்ப முறைகள் பற்றி அறிமுகப்படுத்தப்படும். இந்த பாடநெறயின் பிரதான நோக்கம் பயிலுநர்கள் ஆக்க ரீதியான நிருவாகம், ஊடகம், சட்டம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த வாக்கியங்களை மொழிபெயர்ப்பதுடன் தொடர்புடைய அடிப்படை அறிவால் பலப்படுத்துவதாகும். பல்வேறு மட்டங்களில் தமது அறிவினை பரிமாற்றிக் கொள்வதற்கும் கல்வியியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள், ஆக்கத்திறன்மிக்க எழுத்தாளர்கள் ஆகியோர்களாக பணியாற்றுவதற்கும் அவர்கள் தமது அறிவினை வளர்த்துக்கொள்கின்றனர். மேலும் பங்குபற்றுவோருக்கு பொதுவான பல்மொழித்தன்மை, பல்துறை கலாசாரங்கள் பற்றிய அறிவினை பெற்றுக்கொடுப்பதும் இந்த பாடநெறியின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
* பாடநெறியின் உள்ளடக்கம்
* வாசித்தல் தொடர்பான முறைகள், பந்தியொன்றினை வரைவிலக்கணப்படுத்தும் பல்வேறு முறைகள்.
* உடனுக்குடன் உரைபெயர்ப்புச் செய்யும் திறனை விருத்தி செய்தல்.
* இலக்கு மொழி/வாசகம்/செவிமடுப்போர்.
* அரசாங்க ஆவணங்களை மொழிபெயர்க்கும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும்.
* வாசகங்கள் மற்றும் (intertextuality).
* பலவிதமான வாசகங்கள் : வகையும் பதிவும்.
* ஆக்கத்திறனாக எழுதுதல்.
* மொழிபெயர்ப்பின் சமத்தன்மை.
* வாசகத்தின் தன்மை, இசைவு.
* சட்ட மொழிபெயர்ப்புக்கள்.
* கலைச் சொற்கள் : மூல மொழிகளின் தன்மை.
* மொழிபெயர்ப்பும் ஊடகமும்.
* கல்வியினை அடிப்படையாகக் கொண்ட வெளிக்கள பயணங்கள்.
இரண்டாம் மொழி ஒன்றினை கற்பித்தல் பற்றிய பயிற்சி பாடநெறி( சிங்களம்/தமிழ் - 5 நாள் வதிவிட பாடநெறி )
இரண்டாம் மொழி ஒன்றாக சிங்களம் அல்லது தமிழ் மொழியினை கற்பிப்போர், தமது கற்பித்தல் திறனை விருத்தி செய்துகொள்ளல் மற்றும் மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு உரிய முதலாம், இரண்டாம் மொழிகளின் தன்மை மற்றும் வியூகம் என்பவற்றினை நன்கு தெளிவுபெறும் பொருட்டு முறைசார் அறிவினைப் பெற்றுக்கொடுக்கும் தொழிற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதோர் பாடநெறியாகும். இரண்டாம் மொழியாக சிங்களம், தமிழ் அமதழிகளைக் கற்பிக்கும் சமூக, வரலாற்று மற்றும் அரசியல் ரீதியான பார்வைகள், மொழியின் இருவாந்தன்மை மற்றும் இரண்டாம் மொழியொன்றினை கற்பிப்பதில் முகம்கொடுக்கும் பிரச்சினைகள், பிரதேச மொழிப் பயன்பாட்டில் காணப்படும் மாற்றங்கள், அதிர்மறையான இலக்கணங்கள், கற்பித்தல் முறைகள், பிழையான பகுப்பாய்வு, மொழி பரீட்சைகள், கற்பித்தல் உபகரணங்கள், கற்புல விடயங்கள் என்பவற்றினைத் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தல் என்பன இந்த பாடநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி (சிங்களம் - தமிழ் 108 மணித்தியாலங்களைக் கொண்ட பகுதிநேர பாடநெறி)
ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கேற்ப உரிய மொழித் தேர்ச்சி மட்டத்தினை அடைதல், தேவையான அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக இந்த பாடநெறி நடைபெறுகின்றது. மொழிக் கல்வி மற்றும் பயிற்சி பற்றிய தேசிய நிறுவகத்தில் பயிற்சிபெற்ற போதனாசிரியர்கள் அரசாங்க அலுவலகங்களில் வகுப்புக்களை நடாத்துகின்றனர். பல்வேறு மட்டங்களுக்கான பயிற்சிப் புத்தகங்களும் உள்ளன.