சமூகப்பணித் துறையில் முன்னோடி நிறுவனமான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் 1978 இல் இல 16.25 யின் படி பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு கீழ் இயங்கும், தொழில்வாண்மைச் சமூகப்பணிக் கல்வியை வழங்கும் இலங்கையில் உள்ள ஒரேயொரு நிறுவனமாக இருப்பதோடு, இலங்கையில் சமூக அபிவிருத்தி, மற்றும் சமூக நலன்புரி முன்னேற்றங்களுக்காக தொழில்வாண்மை சமூகப் பணியாளர்களை உருவாக்கும் ஒரே நிறுவனமாகவும் இது உள்ளது.
பாடங்கள் மற்றும் கற்கைநெறிகள்
சமூகப்பணி முதுமானிப் பட்டம் அறிமுகம்
சமூகப் பணித் துறையிலும் மற்றும் சமூக நலன்புரித் துறையிலும் தொழில்வாண்மைத் தகைமையுள்ள தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதன் மூலம் நாட்டில் சமூக அபிவிருத்திக்கு உந்துதலாக இருப்பதே இக் கற்கையின் பிரதான நோக்கமாகும்.
சமூகப் பணி இளமானிக் கற்கை அறிமுகம்
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம் மூலம் நடாத்தப்படும் சமூகப் பணி இளமானிப் பட்டத்தின் நோக்கம் என்னவெனில், சமூக அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் சமூக நலன்புரிச் சேவை முகாமைத்துவத்துக்கான திறன் உள்ள பல் இனம் வாழும் இலங்கைக்குள் சமாதானமும் மற்றும் ஒன்றுகூடி வாழ்வதற்குமான திறன் உள்ள சமூகப் பணியாளர்களை உருவாக்குவதுமாகும்.
சமூகப் பணி டிப்ளோமாப் பாடநெறி அறிமுகம்
சமூகப்பணி பற்றிய இரண்டு வருட பூரண கால டிப்ளோமாப் பாடநெறியானது சமூகப் பணித் துறையில் பயிற்றப்பட்ட மனித வளத்தேவையை நிறைவு செய்யும் நோக்காக்க் கொண்டு நடாத்தப்படும் பாடநெறியாகும். சமூகப் பணியாளர்களின் பங்களிப்பை நம்நாட்டு அபிவிருத்தி செயன்முறையில் பெற்றுக் கொள்வது இப் பாடநெறியின் மற்றுமொரு இலக்காகவும் உள்ளது.
உளவளத்துணை டிப்ளோமா பாடநெறி அறிமுகம்
18 மாதங்களைக் கொண்ட இப்பாடநெறியான 6 மாத களப் பயிற்சியையும் உள்ளடக்கியுள்ளது. களப் பயிற்சியின் போது மாணவர்கள் கோட்பாட்டு ரீதியான அறிவை பிரயோகிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. உளவளத்துணையாளரின் மேற்பார்வையில் சிறந்த பிரயோக பயிற்சி வழங்கப்படுகிறது. 432 மொத்த மணித்தியாலயங்களில் 288 மணித்தியாலயங்கள் வகுப்பறை விரிவுரையும், 144 மணித்தியாலயங்கள் திறன்விருத்தி பயிற்சியும் களப்பணியில் வழங்கப்படுகிறது.